FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

கேரள மாநில மக்களுக்கு நிவாரணம்: வணிகர் சங்கம் கோரிக்கை

கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் அத்தியாவசியப் பொருள்களை வழங்கலாம்

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 9:53 am IST
பகிர்:

கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் அத்தியாவசியப் பொருள்களை வழங்கலாம் என்று விழுப்புரம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து அதன் தலைவர் கே.ஜே.ரமேஷ் வெளியிட்ட அறிக்கை: அண்டை மாநிலமான கேரளத்தில், வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விழுப்புரம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் நிவாரணப் பொருள்கள் வழங்க உள்ளது. 
இதில், வணிகர்கள், பொதுமக்கள் தங்களால் இயன்ற அளவு பொருள்களை வழங்கி உதவி செய்யலாம்.
புழுங்கல் அரிசி (ஐ.ஆர். 20), துவரம் பருப்பு, கடலை பருப்பு, பாசிப் பயறு, கருப்பு கொண்டைக் கடலை, சர்க்கரை, டீ தூள், காப்பி தூள், பால் பவுடர், சோப்பு வகைகள், பிஸ்கட் வகைகள், பேஸ்ட், டூத் பிரஷ், சம்பா கோதுமை ரவை, நூடுல்ஸ், சானிடரி நாப்கின், கொசுவர்த்தி சுருள் போன்ற பொருள்களை விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள ஆர்யா வைசிய சமூக சத்திரத்தில் வந்து வழங்கலாம். 
மேலும்,  விவரங்களுக்கு 9443228160, 9150200544, 9486518039 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments