முதியவர் மாயம்
திண்டிவனம் அருகே கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றவர் மாயமானார்.
திண்டிவனம் அருகே கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றவர் மாயமானார்.
பட்டணம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பரசுராமன்(60). கால்நடைகளை மேய்ச்சலுக்கு அருகில் உள்ள வயல் வெளிப் பகுதிக்கு சனிக்கிழமை அழைத்துச் சென்ற இவர், வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காத நிலையில், ரோசணை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.