செஞ்சிக்கோட்டை கோயிலில் புத்தாண்டு வழிபாடு: நிர்வாகிகள் ஆலோசனை
செஞ்சிக்கோட்டை வீரஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு வழிபாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செஞ்சிக்கோட்டை வீரஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு வழிபாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செஞ்சி அருணாசலேஸ்வரர் கோயில் வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு கமலக்கன்னிஅம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அரங்க.ஏழுமலை தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் செல்வம்(எ)ராஜகுமார், கு.விநாயகமூர்த்தி, செல்வராஜ், சீனு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீர்மானங்கள்: ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் வரும் பக்தர்களுக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வது, நீண்ட வரிசையில் நின்று அமைதியான முறையில் அனைவரும் வழிபாடு செய்யத் தேவையான ஏற்பாடுகளை செய்வது, மற்றும் காவல் துறை, தீயணைப்பு, சுகாதாரத் துறையின் உதவியை பெற்று தயார் நிலையில் இருக்கச் செய்வது.
செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அன்று காலை முதல் மாலை 5 மணி வரை தொடர் அன்னதானம் வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் வழிபாட்டு மன்ற உறுப்பினர்கள், அருணாசலேஸ்வரர் கோயில் திருப்பணிக் குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.