கங்கை முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
விழுப்புரம், பாணாம்பட்டு பாதை, காந்தி நகரில் அமைந்துள்ள பாலமுருகன், கங்கை முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம், பாணாம்பட்டு பாதை, காந்தி நகரில் அமைந்துள்ள பாலமுருகன், கங்கை முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காலை 9 மணியளவில் நான்கு கால யாக பூஜைகள் நிறைவடைந்து, கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றினர்.
விழாவுக்கு நிலக்கிழார் வி.எல்.பி. ராமமூர்த்தி தலைமை வகித்தார். இரா.லட்சுமணன் எம்.பி., மருத்துவர் இரா.சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டி.எஸ்.பி. சங்கர், தொழிலதிபர் மகாலட்சுமி ரமேஷ், தமாகா மாவட்டத் தலைவர் தசரதன், சரஸ்வதி பள்ளித் தாளாளர் ராஜசேகர், அதிமுக கோலியனூர் முன்னாள் நகர் தலைவர் குப்புசாமி, மாணவரணி ராம.சரவணன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.