FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அனந்தபுரம் செட்டிக்குளம் சீரமைப்பு

செஞ்சி அருகேயுள்ள அனந்தபுரத்தில் பராமரிப்பின்றிக் கிடந்த செட்டிக்குளம் கரைகள் "தினமணி' செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டு வருகிறது.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

செஞ்சி அருகேயுள்ள அனந்தபுரத்தில் பராமரிப்பின்றிக் கிடந்த செட்டிக்குளம் கரைகள் "தினமணி' செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டு வருகிறது.
செஞ்சி வட்டம், அனந்தபுரம் பொன்னங்குப்பம் சாலையில் உள்ள செட்டிக்குளம் சுமார் 50 ஆண்டுகளாக தூர்வாரப்படாமலும், சீரமைக்கப்படாமலும் காணப்படுகிறது. இந்த குளத்தை விரைந்து தூர்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும் என "தினமணி' நாளிதழில் அண்மையில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, குளத்தை செப்பனிடும் பணி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. குளத்தில் நீர் நிரம்பினால் வெளியேறாமல் இருக்கும் பொருட்டு, தடுப்புச் சுவர் உயர்த்தி கட்டப்பட்டு வருகிறது. 
மேலும், கரைப்பகுதிகளும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. போதிய நிதி இல்லாததால் குளத்தை தூர்வார இயலவில்லை என்றும், தற்போது கரைப் பகுதிகள் மட்டுமே சீரமைக்கப்பட்டு வருவதாகவும் பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 
எனினும், இந்த குளத்தை தூர்வார விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு தூர் வாரினால் அனந்தபுரம், சித்தரசூர் ஆகிய இரு பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும் என்றும் அனந்தபுரம் பொது மக்கள் தெரி
விக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments