FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புத்தனந்தல் அணைக்கட்டு சீரமைக்கும் பணி தொடக்கம்

உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள புத்தனந்தல் அணைக்கட்டு, 10 கி.மீ. தொலைவு வரத்து வாய்க்கால்களை தூர்வாரி, சீரமைக்கும் பணியை இரா.குமரகுரு எம்எல்ஏ புதன்கிழமை தொடக்கிவைத்தார்.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள புத்தனந்தல் அணைக்கட்டு, 10 கி.மீ. தொலைவு வரத்து வாய்க்கால்களை தூர்வாரி, சீரமைக்கும் பணியை இரா.குமரகுரு எம்எல்ஏ புதன்கிழமை தொடக்கிவைத்தார்.
உளுந்தூர்பேட்டை ஒன்றியம், புத்தனந்தலில் கடந்த 1954-ஆம் ஆண்டு, அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த அணைக்கு சங்கராபுரம் வட்டம், விரியூர், ஏகால் வனப்பகுதியில் பெய்யும் மழைநீர் வந்து சேருகிறது. நாளடைவில் இந்த அணை, வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படாததாலும், பராமரிக்கப்படாததாலும், பாசன வசதி பெற்று வந்த நிலங்கள் நீர் சென்றடையாமல் பயனற்று கிடந்தன.
மழைக்காலம் நெருங்கும் நிலையில், புத்தனந்தல் அணைக்கட்டை தூர்வாரி, வரத்து வாய்க்கால்களை சீரமைக்கும் பணியை உளுந்தூர்பேட்டை தொகுதி எம்எல்ஏ இரா.குமரகுரு தொடங்கி வைத்தார். இப்பணி நிறைவடைந்து மழைக்காலத்தில் அணைக்கட்டில் சேகரமாகும் தண்ணீர் மூலம் ஆத்தூர், பிள்ளையார்குப்பம், பா.கிள்ளனூர், களமருதூர், டி.ஓரத்தூர் உள்பட 8 ஏரிகள் நிரம்பினால் 
15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்த விழாவில் பங்கேற்ற குமரகுரு எம்.எல்.ஏ.விடம் திருநாவலூர் ஒன்றியம், பிள்ளையார்குப்பம் மேம்பாலம், பா.கிள்ளனூர் மேம்பாலம் மற்றும் களவனூர் மேம்மாலம் ஆகிய மேம்பாலங்களிலன் அருகில் தடுப்பு அணை கட்ட வேண்டும், சங்கராபுரம் வட்டம் விரியூரில் தென்பெண்ணை ஆற்றோடு, கெடிலம் ஆற்றை இணைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் நாராயணன், உளுந்தூர்பேட்டை ஒன்றிய அதிமுக செயலாளர் ஜி.மணிராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments