FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் விழுப்புரத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் விழுப்புரத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருந்திட்ட வளாகம் நுழைவாயில் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் அருமுத்துவள்ளியப்பா, மாவட்டச் செயலாளர் எழிலன் ஆகியோர் தலைமை வகித்தனர். 
கல்வி மாவட்டத் தலைவர் பெருமாள் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் சரவணன், மாவட்ட அமைப்புச் செயலாளர் பாலமுரளி, மாவட்டத் தலைமையிட செயலாளர் பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
முன்னாள் மாவட்டத் தலைவர் செந்தில்குமார், மாநிலத் துணைத் தலைவர் கோடீஸ்வரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநிலப் பொருளாளர் செல்லையா, மாநிலச் செயலாளர் ரஹீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
நீட் பயிற்சியில் முதுநிலை ஆசிரியர்களை ஈடுபடுத்துவதைத் தவிர்த்து, பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அதிகப்படியாக, காலிப்பணியிடங்கள் இருப்பதால் இரண்டாம் கட்ட பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும், பொதுமாறுதல் பெறும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். 
திண்டிவனம் கல்வி மாவட்டத் தலைவர் பழனிவேலு நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments