ரூ.3 லட்சம் நில மோசடி: ஒருவர் மீது வழக்குப் பதிவு
செஞ்சி அருகே ரூ.3 லட்சம் மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக ஒருவர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
செஞ்சி அருகே ரூ.3 லட்சம் மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக ஒருவர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
செஞ்சி டாக்டர் கே.வி.கே. தெருவைச் சேர்ந்த ராமானுஜம் மகன் ஆதிநாராயணன். இவர், கடந்த 2016-ஆம் ஆண்டு, மேல்மலையனூர் அருகே கீழ்புதுப்பட்டைச் சேர்ந்த ஏழுமலை மகன் பிரபுவிடம், மேல்புதுப்பட்டு கிராமத்தில் ஒரு ஏக்கர் 35 சென்ட் நிலத்தை கிரயமாகப் பெற்றாராம்.
அதன்பிறகு, கடந்த 2017-ஆம் ஆண்டில், அந்த நிலத்தை பிரபு காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் ஈடுவைத்து அபகரித்துவிட்டாராம்.
இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் இருக்கும். இது குறித்து அறிந்த ஆதிநாராயணன் விழுப்புரம் மாவட்ட நில அபகரிப்புத் தடுப்பு சிறப்புப் பிரிவில் புகார் செய்துள்ளார். அதன்பேரில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூங்காவனம் தலைமையிலான போலீஸார் பிரபு மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.