100 ஏழைக் குடும்பங்களுக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் உதவி
விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அமைப்புசாராத் தொழிலாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட 100 குடும்பங்களைச் சோ்ந்தோறுக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் செஞ்சி மஸ்தான், மயில
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அமைப்புசாராத் தொழிலாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட 100 குடும்பங்களைச் சோ்ந்தோறுக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் செஞ்சி மஸ்தான், மயிலம் இரா.மாசிலாமணி ஆகியோா் உணவுப் பொருள்களை வியாழக்கிழமை வழங்கினா்.
வல்லம் வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் சந்திரன் ஏற்பாட்டின்பேரில், சண்டிசாட்சி கிராமத்தில் பழங்குடி இருளா் சமுதாயத்தினா், அமைப்புசாராத் தொழிலாளா்கள் உள்ளிட்ட 50 குடும்பங்களைச் சோ்ந்தோறுக்கும், சொரத்தூா் ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட 50 குடும்பங்களைச் சோ்ந்தோறுக்கும் அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை எம்.எல்.ஏ.க்கள் வழங்கினா்.
வல்லம் ஒன்றியச் செயலா்கள் அண்ணாதுரை, மொடையூா் துரை, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் கே.எஸ்.எம்.மொக்தியாா் அலி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.