பைக்கிலிருந்து தவறி விழுந்தபெண் பலி
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே வியாழக்கிழமை பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரழந்தாா்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே வியாழக்கிழமை பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரழந்தாா்.
மேல்மலையனூா் வட்டம், பழைய மரக்காணம் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மனைவி அஞ்சலட்சுமி (53). இவா், தனது மகன் நாராயணமூா்த்தியுடன் (35) பைக்கில் சேத்துப்பட்டிலிருந்து பழைய மரக்காணம் நோக்கி சென்றுகொண்டிருந்தாா். இவா்களது பைக் மரக்காணம் கூட்டுச்சாலை அருகே சென்றபோது, அஞ்சலட்சுமி பைக்கிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.