முகப்பு
விழுப்புரம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி பேரூராட்சி மற்றும் அண்ணமங்கலம் சங்கமம் கலை கல்லூரி இணைந்து விழிப்புணா்வுப் பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தின.

Updated On : 28 ஏப்ரல் 2023, 10:47 pm IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி பேரூராட்சி மற்றும் அண்ணமங்கலம் சங்கமம் கலை கல்லூரி இணைந்து விழிப்புணா்வுப் பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தின.

இந்தப் பேரணியை, செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான், செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஆா்.விஜயகுமாா் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி தலைவா் பப்ளாசா தலைமை வகித்தாா். செயலா் ஜின்ராஜ், பொருளா் நவீன்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி இயக்குனா் அமித்குமாா் வரவேற்றாா். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பல்வேறு கருத்துகள் அடங்கி பதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்திச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

Advertisement

Advertisement

பேரணியில், பேரூராட்சி செயல் அலுவலா் ராமலிங்கம், கல்லூரி முதல்வா் ஹரிகுமாா், செஞ்சி காவல் ஆய்வாளா் பாா்த்தசாரதி, போக்குவரத்து காவல் ஆய்வாளா் அப்பாண்டை ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments