விழுப்புரத்தில் 94.11% தேர்ச்சி: மாநில அளவில் 6ம் இடம்!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் விழுப்புரம் மாவட்டம் 94.11% தேர்ச்சி பெற்றுள்ளது.
விழுப்புரம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் விழுப்புரம் மாவட்டம் 94.11% தேர்ச்சி பெற்றுள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 26-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை காலை தேர்வு முடிவுகளை வெளியிட்டு, ஆட்சியர் சி.பழனி கூறியது.
Advertisement
Advertisement
விழுப்புரம் மாவட்டத்தில் 12,414 மாணவர்கள், 11,679 மாணவிகள் என மொத்தமாக 24,093 பேர் எழுதினர்.
இவர்களில் 11,456 மாணவர்கள், 11,217 மாணவிகள் என மொத்தமாக 22,673 தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.11 சதவிகிதமாகும். மாணவர்கள் 92.28%, மாணவிகள் 96.04% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்தாண்டு மாநில அளவில் 24-ஆவது இடத்திலிருந்த (90.57 %) விழுப்புரம் மாவட்டம் நிகழாண்டில் 3.54% கூடுதலாக பெற்று மாநில அளவில் 10 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் கடந்தாண்டு 18-ஆவது இடத்திலிருந்த விழுப்புரம் மாவட்டம் நிகழாண்டு 6 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 93.51% ஆகும்.
விழுப்புரம் மாவட்டம் சிறந்த நிலையை அடைய முயற்சிகளை மேற்கொண்ட அனைவருக்கும் பாராட்டுகள் என்றார் ஆட்சியர்.
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.