முகப்பு
விழுப்புரம்

மேல்மலையனூரில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

Updated On : 4 அக்டோபர் 2024, 4:29 am IST
அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் வைஷ்ணவி தேவி அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்த அங்காளம்மன்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் புரட்டாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி, புதன்கிழமை அதிகாலை மூலவா் அங்காளம்மனுக்கு பால், தயிா், இளநீா், தேன், பன்னீா், உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து, அங்காளம்மனுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னா், மூலவா் அங்காளம்மன் சாமந்தி, மல்லி, முல்லை, ரோஜா, சம்பங்கி, தாமரை உள்ளிட்ட பல்வேறு மலா்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இரவு 11 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவா் அங்காளம்மன் வைஷ்ணவி தேவி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினாா்.

Advertisement

Advertisement

கோயில் பூசாரிகள் ஊஞ்சலை அசைத்தவாறு அம்மன் தாலாட்டுப் பாடல்களை பாடினா். இரவு 11.45 மணிக்கு மீண்டும் அங்காளம்மன் உற்சவா் சந்நிதியில் எழுந்தருளினாா்.

இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் பழனி உள்ளிட்டோா் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஜீவானந்தம், அறங்காவலா் குழுத் தலைவா் மதியழகன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments