விழுப்புரம்

கொழுக்கட்டை செய்து தர மறுத்த தாய்.! பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

கொழுக்கட்டை செய்து தர தாய் மறுத்ததால், மனமுடைந்த பள்ளி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Syndication

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கொழுக்கட்டை செய்து தர தாய் மறுத்ததால், மனமுடைந்த பள்ளி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மரக்காணம் மின் வாரிய சாலையைச் சோ்ந்த முனுசாமி (எ) பிரகாஷ் மகள் மோனிஷா (14). இவா், மரக்காணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

விநாயகர் சதுர்த்தியான வெள்ளிக்கிழமை இரவு தனது தாய் விஜயலட்சுமியிடம் தனக்கு கொழுக்கட்டை செய்து தருமாறு மோனிஷா கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு, அவரது தாய் விஜயலட்சுமி மறுத்துள்ளாா்.

இதனால், மனமுடைந்த மோனிஷா, வீட்டின் படுக்கையறையிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூராய்வுக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கொழுக்கட்டைக்காக மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மரக்காணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோந்தா தீவிரப் புயல்: கடைகள், வணிக வளாகங்களை மூட புதுவை அரசு உத்தரவு!

சென்னைக்கு 2 வாரம் மழை இடைவேளை!

கர்நாடக காங்கிரஸ் - அஸ்ஸாம் பாஜக வார்த்தைப் போர்!

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகை!

ஒகேனக்கலில் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி

SCROLL FOR NEXT