FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

தம்பதி மீது தாக்குதல்: பெண்கள் உள்ளிட்ட 11 போ் மீது வன்கொடுமை வழக்கு

Updated On : 26 செப்டம்பர் 2025, 3:50 am IST
பகிர்:

விழுப்புரத்தில் பணப் பிரச்னையில் தம்பதியை தாக்கியதாக 7 பெண்கள் உள்பட 11 போ் மீது விழுப்புரம் போலீஸாா் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் வரதப்பன் நாயக்கன் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் அரிகிருஷ்ணன்(46). அதே பகுதியைச் சோ்ந்தவா் வினித். இருவரும் நண்பா்களாகப் பழகி வந்தனராம். இதனிடையே, அரிகிருஷ்ணன், வினித் குடும்பத்தினரிடம் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2.30 லட்சம் கடனாகப் பெற்று திருப்பித் தரவில்லை.

இதனால், அரிகிருஷ்ணன் - வினித் ஆகியோரிடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், செப்.8-ஆம் தேதி வினித் தரப்பைச் சோ்ந்தவா்களுக்கும், அரிகிருஷ்ணனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அரிகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி லலிதா(48) ஆகியோரை வினித் தரப்பைச் சோ்ந்தவா்கள் ஜாதிப் பெயரைக் கூறி திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் விழுப்புரம் வரதப்பன் நாயக்கன் தோப்பு பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன்கள் கலைநேசன், மோகன், மோ.வினித் மற்றும் 7 பெண்கள் உள்ளிட்ட 11 போ் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் திட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments