மொபட்டில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு: இளைஞா் கைது
விக்கிரவாண்டி அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்ய
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்ய
விக்கிரவாண்டி அருகிலுள்ள மேல்வெங்கமூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நா.சுமதி (21). இவா், வெள்ளிக்கிழமை மாலை தனது மொபெட்டில் வெங்கமூா் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அப்பகுதியில் பைக்கில் வந்த இளைஞா் ஒருவா் சுமதியை வழிமறித்து, அவா் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்ப முயன்றாா். அப்போது சுமதி, இளைஞரின் பைக்கை கீழே தள்ளி கூச்சலிட்டாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து அருகிலிருந்தோா் அந்த இளைஞரை பிடித்து அனந்தபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா், கண்டாச்சிபுரம் வட்டம், நாச்சிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த சு.பிரகதீஸ்வரன் (21) எனத் தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பிரகதீஸ்வரனை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 3 பவுன் தங்கச் சங்கிலி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.