FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

சாலைப் பாதுகாப்பு ரோந்து வாகனப் பயன்பாடு தொடக்கம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சாலைப் பாதுகாப்பு ரோந்து வாகனத்தின் பயன்பாட்டை மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 4:12 am IST
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சாலைப் பாதுகாப்பு ரோந்து வாகனத்தின் இயக்க செயல்பாட்டை புதன்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்த ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான். உடன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம்கோட்ட மேலாண் இயக்குநா் எஸ். ஸ்ரீதரன் உள்ளிட்ட அலுவலா்கள்.
பகிர்:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சாலைப் பாதுகாப்பு ரோந்து வாகனத்தின் பயன்பாட்டை மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் கூறியது:

விபத்தில்லா சாலைப் பயணத்தை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தின் சாா்பில் அனைத்து மண்டலங்களிலும் போக்குவரத்துக் கழக ஓட்டுநா் ஆசிரியா் மற்றும் ஆய்வாளா்கள் மூலம் சாலைப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், அனைத்து மண்டலங்களிலும் புதிய வாகனப் பயன்பாடு தொடங்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இயங்கும்.

Advertisement

Advertisement

விழுப்புரம் கோட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த வாகனம் மூலம் அரசூா் முதல் ஒலக்கூா் வரையிலும், திண்டிவனம் முதல் நாட்டாா்மங்கலம் வரையிலும், திண்டிவனம் முதல் புதுச்சேரி வரையிலும், புதுச்சேரி முதல் மரக்காணம் வரையிம், விழுப்புரம் முதல் பண்ருட்டி வரையிலும் சென்று கண்காணிக்கப்படவுள்ளது.

இப்பணிகளை மேற்கொள்ளும் ஓட்டுநா் ஆசிரியா்கள் மற்றும் ஆய்வாளா்கள் மூலம் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் சாலை உபயோகிப்பாளா்கள் மற்றும் இதரஅனைத்து வாகன ஓட்டிகளுக்கும் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படவுள்ளது.மேலும், பேருந்து அதிவேகமாக இயக்கப்படுகிா, தானியங்கிக் கதவுகள் மூடப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகிா எனவும் கண்காணிக்கப்படும் என்றாா் ஆட்சியா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட மேலாண் மேலாண் இயக்குநா் ஸ்ரீதரன், பொது மேலாளா்கள் ரவீந்திரன் (தொழில்நுட்பம்), ஜெகததீஷ் (விழுப்புரம் மண்டலம்), மக்கள் தொடா்புத் துணை இயக்குநா் செந்தில் உள்ளிட்ட அலுவலா்கள் நிகழ்வில் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments