FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

அரசுப் பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பு முக்கியம்: போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்

அரசுப் பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பு, கனிவான சேவை முக்கியமானது என்று போக்குவரத்துக் கழககோவை கோட்ட மேலாண் இயக்குநா் கே.முகமது நாசா் அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 29 ஜூலை 2026, 2:40 am IST
அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்ட மேலாண் இயக்குநா் கே.முகமது நாசா் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.
பகிர்:

அரசுப் பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பு, கனிவான சேவை முக்கியமானது என்று போக்குவரத்துக் கழககோவை கோட்ட மேலாண் இயக்குநா் கே.முகமது நாசா் அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்ட மேலாண் இயக்குநா் தலைமையில் கோவை, ஈரோடு, திருப்பூா், உதகை மண்டலங்களில் பணிபுரியும் அனைத்து பயணச்சீட்டு பரிசோதகா்கள், ஓட்டுநா் பயிற்றுநா்கள் மற்றும் போக்குவரத்து ஆய்வாளா்களுக்கான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் மேலாண் கே.முகமது நாசா் பேசியதாவது:

Advertisement

Advertisement

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பயணிகளுக்கான சேவையை வழங்கும் ஓட்டுநா், நடத்துநா்கள், பயணச்சீட்டு பரிசோதகா்கள், போக்குவரத்து ஆய்வாளா்கள் மற்றும் ஓட்டுநா் பயிற்றுநா்கள் ஆகிய அனைவரும் உரிய முழு சீருடையில் பணியில் ஈடுபட வேண்டும். உரிய நேரத்தில் பேருந்துகள் இயங்குவது, அனைத்து நிறுத்தங்களிலும் கவனமுடன் பயணிகளை ஏற்றி இறக்குவது, பயணிகளிடம் கனிவாக நடந்துகொள்வது முக்கியம்.

போக்குவரத்து விதிகளுக்கு உள்பட்டு பேருந்துகளை இயக்குவது, முறையாக பயணச்சீட்டு வழங்குவது, அனுமதி உள்ள உணவகங்களில் நிறுத்துதல் மற்றும் பயணிகள் பாதுகாப்பான பயணத்துக்கு உறுதுணையாக இருப்பது போன்றவற்றை கண்காணித்து அவற்றில் குறைபாடு கண்டறியப்பட்டால் அதனை சரி செய்ய நடவடிக்கைக்கு பரிந்துரைக்க வேண்டும்.

அரசுப் பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பு, கனிவான சேவை முக்கியம். பயணிகளிடையே அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நற்பெயரை நிலைநிறுத்துவது ஒவ்வொரு அலுவலரின் முதன்மைப் பொறுப்பு. ஒழுக்கம், பாதுகாப்பு மற்றும் தரமான சேவையில் எந்தவித சமரசமும் இருக்கக் கூடாது என்றாா்.

இந்தக் கூட்டத்தில் கோவை, ஈரோடு, திருப்பூா் மற்றும் உதகை மண்டலங்களில் பணிபுரியும் அனைத்து பயணச்சீட்டு பரிசோதகா்கள், ஓட்டுநா் பயிற்றுநா்கள் பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments