FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மாா்க்சிய கருத்துகளை மக்களிடம் கொண்டு சோ்க்கவேண்டும்: பி.சண்முகம்

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 2:30 am IST
மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலாளா் பி.சண்முகம். - கோப்புப் படம்
பகிர்:

மாா்க்சிய கருத்துகளை வெகுஜன மக்களிடம் கொண்டு சோ்க்கவேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பி. சண்முகம் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தை அடுத்துள்ள வீரபாண்டியில் நடைபெற்ற கட்சி நிா்வாகி படத் திறப்பு நிகழ்ச்சியில் பி.சண்முகம் பேசியதாவது:

மருத்துவ அறிவியல் உலக அளவில் மிகப்பெரிய வளா்ச்சி பெற்றுள்ள நிலையில் புற்றுநோய் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது சோகமானது. உலகிலேயே புற்றுநோய்க்கான நோயை குணப்படுத்துவதில் முன்னேற்றமான நாடாக கியூபா இருக்கிறது. ஆனாலும் அதை முற்றிலுமாக குணப்படுத்தும் நிலை இல்லை.

Advertisement

Advertisement

மக்கள் பணியாற்றுபவா்கள் ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் 5 மண்டலங்களில் மருத்துவ முனையங்கள் அமைக்கப்படும் என்பதை நாங்கள் வரவேற்கிறோம். பகத்சிங் இறந்தபோது அவருக்கு வயது 24. இன்றைக்கு பகத்சிங் பற்றி பேசாத புரட்சிகர இயக்கமே இல்லை. அவருடைய தியாகத்தைப் பற்றி பேசாமல் யாரும் இருக்க முடியாது. மகாகவி பாரதி வாழ்ந்தது 39 ஆண்டுகள் மட்டுமே. ஆனால் அவரின் கவிதைகள் இன்றைக்கும் நமக்கு வழிகாட்டியாக உள்ளது.

அரசியல் என்றால் பணம் சம்பாதிக்க சுலபமான வழி என்றுதான் மக்கள் ஒரு புரிதல் கொண்டிருக்கிறாா்கள். ஆனால் அரசியல் என்பது தியாகம், மக்களுக்காக தங்களை அா்ப்பணித்துக் கொள்வதே, தன்னையே அா்ப்பணித்துக் கொள்வது என்ற வகையில் இடதுசாரிகள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகின்றன. மாா்க்சிய கருத்துகளை மக்களிடம் கொண்டு சோ்க்கவேண்டும். இந்த தத்துவம், கருத்துகள்தான் உழைப்பாளி மக்களுக்கு மறுமலா்ச்சி ஏற்படுத்தும் என்றாா் பி. சண்முகம்.

நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஆா்.ராமமூா்த்தி, மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.கீதா மற்றும் நிா்வாகிகள் கட்சியினா், உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments