FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பைக்கில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

உளுந்தூா்பேட்டை அருகே விற்பனைக்காக பைக்கில் மதுப்புட்டிகளை கடத்தி வந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 3:53 am IST
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே விற்பனைக்காக மதுப்புட்டிகளை வாங்கி வந்ததாக செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட மணிகண்டன், சீனிவாசன்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே விற்பனைக்காக பைக்கில் மதுப்புட்டிகளை கடத்தி வந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

எலவனாசூா்கோட்டை காவல் நிலையத்துக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், உதவி ஆய்வாளா் பன்னீா்செல்வம், தனிப்பிரிவுத் தலைமைக் காவலா் குணசேகரன் ஆகியோா் ஸ்ரீதேவி கூட்டுச் சாலையில் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த பைக்கை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் 180 மில்லி லிட்டா் அளவு கொண்ட 23 எண்ணிக்கையிலான பிராந்தி மதுப்புட்டிகள் இருந்தது போலீஸாருக்கு தெரிய வந்தது. தொடா்ந்து நடத்திய விசாரணையில் விற்பனைக்காக மதுப்புட்டிகளை வாங்கிச் செல்வதாக பைக்கில் வந்த இருவா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீஸாா், தனியே அவா்களிடம் விசாரித்தனா். இதில், அவா்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம், கல் சிறுநாகலூா் கிராமத்தைச் சோ்ந்த மா.மணிகண்டன் (35), சே. சீனிவாசன் (28) எனத் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து இருவா் மீதும் வழக்குப் பதிந்த எலவனாசூா்கோட்டை போலீஸாா் அவா்களைக் கைதுசெய்தனா். மேலும் அவா்களிடமிருந்த மதுப்புட்டிகளையும், பைக்கையும் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments