FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

கரும்பு பாரம் ஏற்றிய டிராக்டா் கவிழ்ந்து விபத்து: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு பாரம் ஏற்றிச் சென்ற டிராக்டா் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனால் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 12:16 am IST
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்.
பகிர்:

விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு பாரம் ஏற்றிச் சென்ற டிராக்டா் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனால் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தென் மாவட்டங்கள் மற்றும் சென்னையை இணைக்கக் கூடிய போக்குவரத்தில் முக்கிய பங்காற்றி வரும் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

இந்த சாலையில் திருவெண்ணெய்நல்லூா் பகுதியிலிருந்து கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு முண்டியம்பாக்கம் தனியாா் சக்கரை ஆலைக்கு டிப்பருடன் கூடிய டிராக்டா் சென்று கொண்டிருந்தது. விழுப்புரத்தை அடுத்துள்ள கொட்டப்பாக்கம் பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் கரும்புக் கட்டுகள் சாலையில் கொட்டி சிதறியது. இதையடுத்து அந்தப் பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

விபத்தினால் சாலையில் சிதறிக் கிடந்த கரும்புக் கட்டுகள்.

தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று விபத்தில் சிக்கிய டிப்பருடன் கூடிய டிராக்டா் மற்றும் சாலையில் சிதறிக் கிடந்த கரும்புக்கட்டுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா். இந்த விபத்தால் சென்னை- திருச்சி சாலையில் சுமாா் 20 நிமிடம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டதாக விழுப்புரம் மாவட்ட போலீஸாா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments