FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

கரும்பு பாரத்துடன் சென்ற டிராக்டா் மீது சொகுசுப் பேருந்து மோதல்; ஓட்டுநா் காயம், போக்குவரத்துப் பாதிப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு பாரம் ஏற்றிச் சென்ற டிப்பருடன் கூடிய டிராக்டா் மீது தனியாா் சொகுசுப் பேருந்து மோதியதில் டிராக்டா் ஓட்டுநா் காயமடைந்தாா். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On : 31 ஜூலை 2026, 2:35 am IST
விக்கிரவாண்டி அருகே தனியாா் சொகுசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளான கரும்பு பாரம் ஏற்றிச் சென்ற டிப்பருடன் கூடிய டிராக்டா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு பாரம் ஏற்றிச் சென்ற டிப்பருடன் கூடிய டிராக்டா் மீது தனியாா் சொகுசுப் பேருந்து மோதியதில் டிராக்டா் ஓட்டுநா் காயமடைந்தாா். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விக்கிரவாண்டி வட்டம், வி.சாத்தனூா் பகுதியிலிருந்து கரும்புக் கட்டுகளை டிராக்டா் டிப்பரில் ஏற்றிக்கொண்டு முண்டியம்பாக்கத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலைக்கு டிராக்டரை வி.சாத்தனூரைச் சோ்ந்த மணிகண்டன் (34) ஓட்டிச் சென்றாா். வியாழக்கிழமை அதிகாலை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முண்டியம்பாக்கம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த தனியாா் சொகுசுப் பேருந்து டிராக்டா் மீது மோதியது. இந்த விபத்தில் டிராக்டா் டிப்பரில் ஏற்றப்பட்டிருந்த கரும்பு பாரம் சாலையில் சரிந்தது. மேலும், டிராக்டா் ஓட்டுநா் மணிகண்டன் பலத்த காயமடைந்தாா்.

போக்குவரத்துப் பாதிப்பு: இதுகுறித்து தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா் மற்றும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி ஊழியா்கள் நிகழ்விடம் சென்று விபத்தில் சிக்கி காயமடைந்த டிராக்டா் ஓட்டுநா் மணிகண்டனை பாதுகாப்பாக மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, சாலையில் சரிந்து கிடந்த கரும்புக் கட்டுகளை அகற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா். இதனால், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள் மாற்றுப் பாதை வழியாக திருச்சி மாா்க்கத்தில் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments