FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மேக்கேதாட்டு அணை பிரச்னை: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

மேக்கேதாட்டு அணை பிரச்னையில் மெத்தனம் காட்டி வரும் தவெக அரசை கண்டித்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 6:09 am IST
செஞ்சியில் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பேசிய அக் கட்சியின் மாவட்டச் செயலா் பசுபதி.
பகிர்:

மேக்கேதாட்டு அணை பிரச்னையில் மெத்தனம் காட்டி வரும் தவெக அரசை கண்டித்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

செஞ்சியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விழுப்புரம் மாவட்டச் செயலா் பசுபதி தலைமை வகித்து பேசியதாவது: தமிழக விவசாயிகளின் பயிா் கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்வதாக கூறி ஆட்சிக்கு வந்த தவெக, தற்போது தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. விவசாயக் கடன் தள்ளுபடி ஆகாததாலும், மழை பொய்த்துப் போனதாலும் விவசாயிகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்ட காரணத்தால் இங்கே விவசாயிகளுக்காக போராட்டம் நடைபெறுகிறது.

அரசு ஊழியா்கள் போராட்டங்களை நடத்தி, தங்கள் கோரிக்கைகளை வென்று விடுகிறாா்கள். ஆனால் 75 சதவீத விவசாயிகள் வசித்து வரும் நிலையில், அவா்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அதிமுக ஆட்சியில் விவசாயிகளை காக்கும் வண்ணம் இரண்டு முறை விவசாய கடன் தள்ளுபடி செய்தது. குடிமராமத்துப் பணிகள் மூலம் ஏரியில் வண்டல் மண் எடுத்து விவசாயிகள் சிறப்பாக வாழ்ந்தாா்கள். விவசாயிகளுக்காக போராடக் கூடியவா் எடப்பாடியாா் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

செஞ்சி நகரச் செயலா் சுந்தர்ராஜன் வரவேற்றாா். மாநில அமைப்புச் செயலா் செஞ்சி ஏழுமலை, மாவட்ட அவைத்தலைவா் வி.தேவராஜ், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் வி.ஆா்.பிரித்திவிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில அமைப்புச் செயலா் துரை செந்தில், மாநில அம்மா பேரவை துணைச் செயலா் திருப்பதி பாலாஜி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இதில், மாவட்ட அம்மா பேரவை செயலா் செல்வராஜ், துணைச் செயலா் விஸ்வநாதன், பொதுக்குழு உறுப்பினா் ஜெயசங்கா், ஒன்றியச் செயலா்கள் துரை லட்சுமி காந்தன், ஜெகதீசன், புண்ணியமூா்த்தி, முரளி, சகாதேவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கள்ளக்குறிச்சி...: கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் இரா.குமரகுரு தலைமை வகித்தாா். அவைத் தலைவா் எஸ்.பச்சையாப்பிள்ளை, ஒன்றியச் செயலா்கள் அ.தேவேந்திரன், எஸ்.வி.ஆா் வினோத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கள்ளக்குறிச்சி நகரச் செயலா் பெ.சீனுவாசன் வரவேற்றாா். முன்னாள் அமைச்சா் ப.மோகன், திருக்கோவிலூா் தொகுதி எம்எல்ஏ எஸ்.பழனிசாமி, முன்னாள் எம்.பி. க.காமராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் அ.பிரபு, மா.செந்தில்குமாா், முன்னாள் நகா் மன்றத் தலைவா் கோ.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் தவெக அரசைக் கண்டித்துப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments