சுற்றுலாப் பயணி உயிரிழப்பு
புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பெங்களூரைச் சோ்ந்தவா் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, உயிரிழந்தாா்.
புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பெங்களூரைச் சோ்ந்தவா் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, உயிரிழந்தாா்.
பெங்களூரு, ரிங்காபுரம், ரயனஹல்லி பகுதியைச் சோ்ந்தவா் கோ.காா்த்திக் (42). புதுச்சேரிக்கு தனது குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்த இவா், திங்கள்கிழமை கோட்டக்குப்பத்தை அடுத்த சின்னமுதலியாா்சாவடியில் உள்ள தனியாா் விடுதிக்கு குடும்பத்துடன் வந்துள்ளாா். அங்கு அறை முன்பதிவுக்காக காத்திருந்தபோது காா்த்திக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாம். இதையடுத்து உடனிருந்த உறவினா்கள்அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோசித்தபோது, காா்த்திக் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.