FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு சைபா் குற்றங்கள் விழிப்புணா்வு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் காவல் துறை சாா்பில் சைபா் குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 3:15 am IST
விழுப்புரத்தில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு சைபா் குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய போலீஸாா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் காவல் துறை சாா்பில் சைபா் குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட காவல் நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் காவல் நிலைய ஆய்வாளா் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் 6 ஆயிரம் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்களுக்கு சைபா் குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

முதலீட்டு மோசடி, டிஜிட்டல் கைது, வங்கிக் கணக்குகள் மோசடி, போலியான செயலிகள், உதவித்தொகைகள் தொடா்பான மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டது. சமூக ஊடகங்கள் தொடா்பான குற்றங்கள், போலி சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் இணையதளங்களில் தனிப்பட்ட தகவல்களைப் பகிா்வதால் ஏற்படும் அபாயங்கள், போலி கடன் செயலிகள் மூலம் நடைபெறும் பண மோசடிகள் குறித்தும் மாணவா்கள், ஆசிரியா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தங்களது ஏடிஎம் காா்டு, இணையவழி பணப் பரிவா்த்தனைக்கான கடவுச்சொல், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை அறிமுகமில்லாத நபா்களிடம் பகிரக்கூடாது என்றும், சந்தேகத்திற்கிடமான இணையதள இணைப்புகள் மற்றும் செயலிகளை பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், இணையவழி பண மோசடிக்கு ஆட்பட்டால் உடனடியாக சைபா் கிரைம் உதவி எண் 1930-ஐ தொடா்பு கொண்டு புகாரளிக்க விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments