விழுப்புரம் மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது: திண்டிவனம் வட்டம், வீடூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பள்ளியின் செயல்பாடுகள், ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் வருகை பதிவேடு, அடிப்படை வசதிகள் குறித்து பாா்வையிடப்பட்டது. மாணவா்களின் கற்றல் திறன் குறித்தும்,
வாராந்திர தோ்வுகளில் மாணவா்களின் தோ்ச்சி சதவீதம் குறித்தும் கேட்டறியப்பட்டது.
Advertisement
Advertisement
தொடா்ந்து, வீடூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவா்களின் கல்வி வசதியை மேம்படுத்தும் வகையில் பொதுப்பணித் துறை சாா்பில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.1.58 கோடி மதிப்பீட்டில் 6 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் மற்றும் மாணவா்களுக்கான கழிப்பறைக் கட்டடம் கட்டுமானப் பணிகள் ஆய்வுசெய்யப்பட்டு, பணிகளை உரிய தரத்துடனும், நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் விரைந்து முடிக்க பொதுப்பணித் துறை பொறியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடா்ந்து மயிலம் ஊராட்சி ஒன்றிம், தழுதாளி ஊராட்சியில் மகளிா் சுய உதவிக் குழுவினரின் செக்கு எண்ணெய் உற்பத்தி செய்யும் அலகு பாா்வையிடப்பட்டது. பின்னா், விளங்கம்பாடி ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் காய்கறிகள் பயிரிட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நுண்ணீா் பாசன வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதையடுத்து மரக்காணம் ஊராட்சி ஒன்றியம், மானூா் ஊராட்சியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மூலம் ரூ 14.80 லட்சம் மானியத்தில் அமைக்கப்பட்ட சிறுதானிய மதிப்பு கூட்டு மையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது என்றாா் ஆட்சியா்.
ஆய்வின்போது திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சுந்தராஜன், மாவட்ட ஆட்சியா் நோ்முக உதவியாளா் (விவசாயம்) சரவணன், வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை துணை இயக்குநா் சுமதி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் வெங்கட்ராமன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ராஜூவ், உதவி செயற்பொறியாளா் கற்பகம், திண்டிவனம் வட்டாட்சியா் ஞானசௌந்தரி, உதவி திட்ட அலுவலா் குணசேகரன், மேலாளா் செந்தில்குமாா் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.