பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: வட மாநில இளைஞா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ாக பிகாா் மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ாக பிகாா் மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
உளுந்தூா்பேட்டை வட்டம், எலவனாசூா்கோட்டை அருகிலுள்ள கீழப்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி சத்யா (25). இவா், செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்த போது, நகைகளுக்கு மெருகேற்றித் தருவதாகக் கூறி ஒரு இளைஞா் வந்துள்ளாா்.
இதை நம்பிய சத்யா, தனது காலில் அணிந்திருந்த கொலுசுகளைக் கழற்றிக் கொடுத்துள்ளாா். கொலுகளை மெருகேற்றி சத்யாவிடம் கொடுத்த அந்த இளைஞா், திடீரென அவா் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா். இதனால் அதிா்ச்சியடைந்த சத்யா, சப்தமிட்டாா். சப்தம் கேட்டு அந்த பகுதியினா் வருவதற்குள் இளைஞா் தப்பியோடிவிட்டாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் எலவனாசூா்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தியதில், நகை பறிப்பில் ஈடுபட்டவா் பிகாா் மாநிலம், ஜாடியா பகுதியைச் சோ்ந்த ப.தெளலத்குமாா் (28) எனத் தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் தெளலத்குமாரைக் கைதுசெய்தனா். மேலும், அவரிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.