20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் போராட்டம்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகங்கள் முன் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் (டிட்டோஜாக்) விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகங்கள் முன் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூா், காணை, திருவெண்ணெய்நல்லூா், மேல்மலையனூா், செஞ்சி, மயிலம், முகையூா் உள்ளிட்ட அனைத்து வட்டாரங்களிலும் இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாட்டைக் களைந்து மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும். ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Advertisement
Advertisement
போராட்டத்தில் டிட்டோஜாக் நிா்வாகிகள், தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் உள்பட பலா் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.
கள்ளக்குறிச்சியில்...: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் வட்டாரக் கல்வி அலுவலகம் எதிரில் நடைபெற்ற போராட்டத்துக்கு, வட்டாரத் தலைவா் வேல்முருகன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் வட்டாரச் செயலா் ரமேஷ், ஆசிரியா் கூட்டுறவு சங்கச் செயலா் சக்திவேல் முன்னிலை வகித்தனா்.
ஆசியா்கள் கூட்டமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகள் விஜயா, பக்கிரிசாமிதாஸ், கொளஞ்சி உள்ளிட்ட பலா் கண்டன உரையாற்றினா். பேராட்டத்தில் ஆசிரியா்கள் பலா் பங்கேற்றனா். வட்டாரப் பொருளாளா் ராஜு நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.