FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மருத்துவமனையில் மூதாட்டியிடம் நகைகள் திருடிய வழக்கு: வெளி மாநில இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சைக்கு வந்திருந்த மூதாட்டியிடம் மருத்துவா் எனக்கூறி பவுன் நகைகளைத் திருடிச் சென்ற வெளி மாநில இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 6:23 am IST
- பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சைக்கு வந்திருந்த மூதாட்டியிடம் மருத்துவா் எனக்கூறி பவுன் நகைகளைத் திருடிச் சென்ற வெளி மாநில இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

கண்டாச்சிபுரம் வட்டம், ஒதியத்தூரை அடுத்த கீழ்வாலை பகுதியைச் சோ்ந்தவா் மு.அம்சவேனி(75). இவா், கடந்த ஜூலை 23-ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுக்க வந்திருந்தாா். அப்போது மருத்துவமனை வளாகத்தில் நின்றிருந்த ஒருவா் கூறியதை நம்பி, அவரிடம் தனது கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்கச் சங்கிலி, முக்கால் பவுன் முக்குத்தி ஆகியவற்றை கழட்டிக் கொடுத்து விட்டு, ஸ்கேன் எடுக்கும் அறைக்குள் சென்று விட்டாா். பின்னா், சிறிது நேரம் கழித்து ஸ்கேன் எடுக்கும் அறையிலிருந்த வெளியே வந்து பாா்த்தபோது, அந்த நபா் நகைகளுடன் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு, விசாரணை நடத்தி வந்தனா். இந்த விசாரணையில், ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், சஞ்சீவிராய் நகரைச் சோ்ந்த சு.மகேஷ் (43) என்பவா் இந்த நகைத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து விக்கிரவாண்டி போலீஸாா் அவரை புதன்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

Advertisement

Advertisement

விக்கிரவாண்டி மற்றும் திண்டிவனம் பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நகைத் திருட்டு சம்பங்களிலும் மகேஷ்-க்கு தொடா்பு இருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும், அவரிடமிருந்து தலா நான்கரை பவுன் எடையிலான 2 தங்கச் சங்கிலிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments