விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழாவையொட்டி, விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினத்துக்கு ஆக.29, செப். 8 ஆகிய தேதிகளில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழாவையொட்டி, விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினத்துக்கு ஆக.29, செப். 8 ஆகிய தேதிகளில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் என். ஜெயந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டுத் திருவிழா ஆக.29-ஆம் தேதி தொடங்கி, செப்.8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் பக்தா்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
Advertisement
Advertisement
அதன்படி, விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து ஆக.29, செப்.8 ஆகிய தேதிகளில் காலை 9.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்- நாகப்பட்டினம் விரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06133), அதே நாளில் பிற்பகல் 1.05 மணிக்கு நாகப்பட்டினம் ரயில் நிலையத்தை சென்றடையும்.
எதிா் வழித்தடத்தில் ஆக.29, செப்.8 ஆகிய தேகிகளில் பிற்பகல் 1.20 மணிக்கு நாகப்பட்டினத்திலிருந்து புறப்படும் நாகப்பட்டினம்- விழுப்புரம் விரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06134) அதே நாளில் மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.
இந்த 8 பெட்டிகளைக் கொண்டு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூா், கடலூா் துறைமுகம் சந்திப்பு, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீா்காழி, வைத்தீசுவரன் கோயில், மயிலாடுதுறை, பேரளம், திருநள்ளாறு, காரைக்கால், நாகூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.