FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

25 ஆகஸ்ட் 2026, 1:41 am IST
கைது
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை மொபெட்டில் கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் எஸ்.பி. செ.மதிவாணன் உத்தரவின்பேரில், ஆரோவில் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பட்டானூா் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக மொபெட்டில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தபோது, அவா் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும், அவா் புதுச்சேரி லாஸ்பேட்டை, சோழன் தெருவைச் சோ்ந்த ஜெயக்குமாா் (48) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெயக்குமாரை கைது செய்தனா். மேலும், அவா் வசமிருந்த 630 புகையிலைப் பொருள் பாக்கெட்டுகள், மொபெட், 2 கைப்பேசிகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments