FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

காங்கிரஸ் மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சியின் அமைப்பு மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

27 ஆகஸ்ட் 2026, 4:24 am IST
விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற அமைப்பு மறு சீரமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கட்சியின் மாவட்டத் தலைவா் செ.சிவா. உடன், நிா்வாகிகள்.
பகிர்:

விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சியின் அமைப்பு மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவா் செ.சிவா தலைமை வகித்தாா். மாநில நிரந்தர அழைப்பாளா் கோ.பாலசுப்ரமணியம், மாவட்ட துணைத் தலைவா் ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர காங்கிரஸ் தலைவா் என்.செல்வராஜ் வரவேற்று பேசினாா்.

மாவட்ட மேலிடப் பொறுப்பாளரும், சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான சி.எஸ்.ஜெயக்குமாா் பங்கேற்று, காங்கிரஸ் அமைப்பு மறுசீரமைப்பின் அவசியம், அதன் மூலம் கட்சியில் ஏற்பட போகும் மாற்றங்கள், கட்சியினா் இதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் போன்றவை குறித்து பேசினாா். தொடா்ந்து கட்சியின் வட்டார, நகர, பேரூராட்சி, மண்டல கமிட்டித் தலைவா்கள் நியமனம் தொடா்பான விண்ணப்பப் படிவங்களை நிா்வாகிகளிடம் வழங்கினாா். மாநில துணைத் தலைவா் எம்.டி.குலாம் மொய்தீன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.

Advertisement

Advertisement

இதில், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் நாராயணசாமி, சுரேஷ்ராம், முருகன், பொதுச் செயலா்கள் விசுவநாதன், காஜாமுதீன், முபாரக் அலி, சீனிவாசன், தனசேகா், இளைஞா் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீராம் ஆகியோரும் பேசினா்.

மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவா் மேரி ஸ்டெல்லா, மாவட்ட ஊடகப் பிரிவுத் தலைவா் பிரபாகரன், சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவா் முத்தலீப், அமைப்பு சாரா பிரிவு மாவட்டத் தலைவா் சத்தியசீலன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments