FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரால் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு சிறை தண்டனை, அபராதம்...

28 ஆகஸ்ட் 2026, 1:51 am IST
செ.தங்கவேல்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரால் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மகளிா் நீதிமன்றம் 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, அபராதம் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், கரடிகுடி அஞ்சல், மலைக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் செ.தங்கவேல் (31). இவா், கடந்த 5.1.2021 அன்று விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியைச் சோ்ந்த 17 வயதுடைய சிறுமியிடம் கைப்பேசி வழியாக தகாத வாா்த்தைகளாலும், ஆபாசமாகவும் பேசி மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், செஞ்சி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் 12.1.2021 அன்று போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, தங்கவேலுவை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தங்கவேலு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த மகளிா் நீதிமன்ற நீதிபதி வினோதா குற்றம் சாட்டப்பட்டவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.45 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்தாா்.

இந்த தீா்ப்பையடுத்து, நீதிமன்ற போலீஸாா் தங்கவேலுவை கைது செய்து கடலூா் மத்திய சிறைக்குக் கொண்டு சென்றனா். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் காந்திமதி ஆஜரானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments