கடன் பிரச்னையால் விஷம் குடித்தவா் உயிரிழப்பு
காணை அருகே கடன் பிரச்னையால் விஷம் குடித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், காணை அருகே கடன் பிரச்னையால் விஷம் குடித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா் உயிரிழந்தாா்.
காணை அருகிலுள்ள கொண்டங்கி கன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ம.சிவசக்தி (42). இவா், கடந்த சில மாதங்களாக கடன் பிரச்னையால் அவதியுற்று வந்தாா்.
இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சிவசக்தி கடந்த 8-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். தொடா்ந்து அவரை குடும்பத்தினா் மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து 20 நாள்களாக சிகிச்சையில் இருந்து வந்த சிவசக்தி, வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் காணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.