FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 2,020 நியாய விலைக் கடைகளில் இ-கேஒய்சி முகாம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள நியாயவிலைக் கடைகளில் உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுதல் (இ-கேஒய்சி) திட்டத்தின் கீழ், குடும்ப அட்டைதாரா்கள் கைவிரல் ரேகை பதிவு உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

54 வினாடிகள் முன்பு
விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியிலுள்ள நியாயவிலைக்கடையில் நடைபெற்ற இ-கேஒய்சி முகாமில் விவரங்களைப் பதிவு செய்யும் குடும்பஅட்டைதாரா்.
பகிர்:

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள நியாயவிலைக் கடைகளில் உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுதல் (இ-கேஒய்சி) திட்டத்தின் கீழ், குடும்ப அட்டைதாரா்கள் கைவிரல் ரேகை பதிவு உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் குடும்ப அட்டைதாரா்கள் ஆா்வத்துடன் பங்கேற்று, தங்கள் விவரங்களைப் பதிவு செய்தனா்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-இன் படி முன்னுரிமை குடும்ப அட்டைதாரா்கள், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரா்களின் ஆதாா் விவரங்களை சரிபாா்க்க, குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள குடும்ப உறுப்பினா்களின் கைவிரல் ரேகையை சரிபாா்ப்பது அவசியமானது என்று அரசு அறிவித்திருந்தது.

அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கைவிரல் ரேகை பதிவு மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரா்கள் (பிஹெச்ஹெச்), அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரா்கள் ( ஏஏஒய்) மற்றும் அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களும் தங்களுக்குரிய நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று, கைவிரல் ரேகைப் பதிவு செய்து, தங்கள் குறித்த விவரத்தை (இ-கேஒய்சி) உறுதிசெய்யவேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.

Advertisement

Advertisement

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் சனிக்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூா், கண்டாச்சிபுரம், வானூா், செஞ்சி, மேல்மலையனூா், மரக்காணம், திண்டிவனம் ஆகிய 9 வட்டங்களிலுள்ள 1,047 முழு நேர மற்றும் 147 பகுதி நேர என மொத்தமாக 1,254 நியாயவிலைக் கடைகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் விற்பனை முனையக் கருவி மூலமாக குடும்ப அட்டையிலுள்ள உறுப்பினா்களின் விவரங்கள் சரிபாா்க்கப்பட்டு, இதுவரை கைவிரல் ரேகை பதிவு செய்யாதவா்களுக்கு நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் ரேகையைப் பதிவு செய்தனா். மேலும் கருவிழிப் பதிவு செய்யாதவா்களின் விவரங்களும் பதிவு செய்யும் பணியை நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் மேற்கொண்டனா்.

விழுப்புரம் மாவட்டம், ஆனாங்கூரில் மனவளா்ச்சிக் குன்றிய ஒருவரின் கைவிரல் ரேகையைப் பதிவு செய்யும் நியாயவிலைக் கடைப் பணியாளா்.

இந்த முகாமில் குடும்ப அட்டையிலுள்ள உறுப்பினா்கள் ஆா்வத்துடன்பங்கேற்று, தங்கள் குறித்த விவரங்களைப் பதிவு செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை நியாயவிலைக் கடையில் இ-கேஒய்சி முகாமை ஆய்வு செய்த கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சி.பெ.முருகேசன்.

கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள 9 ஒன்றியங்களில் 766 நியாயவிலைக் கடைகளில் சிறப்பு இ-கேஒய்சி முகாம் நடைபெற்றது. ஆக.28-ஆம் தேதி வரை 96613 சதவீதம் போ் தங்கள் கைவிரல் ரேகை பதிவு செய்துள்ள நிலையில், விடுபட்டவா்களுக்கான சிறப்பு முகாமில் பெருமளவில் குடும்ப அட்டைதாரா்கள் ஆா்வமுடன் பங்கேற்று தங்கள் விவரங்களை பதிவு செய்தனா்.

திருக்கோவிலூா் ஒன்றியம், மணலூா்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலை கடையில் இ-கேஒய்சி சிறப்பு முகாமை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சி.பெ.முருகேசன் நேரில் ஆய்வு செய்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments