FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

திருப்பாச்சனூரில் 10 ஹெக்டேரில் எண்ணெய் பனை நடவுத் திட்டம் தொடக்கம்

30 ஆகஸ்ட் 2026, 11:49 pm IST
விழுப்புரம் மாவட்டம், திருப்பாச்சனூரில் எண்ணெய் பனை நடவுத் திட்டத்தை தொடங்கி வைத்த மத்திய வேளாண் துறை இணைச் செயலா் எப்.டி.இனிதா.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் வட்டாரம், திருப்பாச்சனூரில் 10 ஹெக்டோ் பரப்பளவில் மாபெரும் எண்ணெய்பனை நடவுத் திட்டம் தொடங்கப்பட்டது.

தேசிய சமையல் எண்ணெய் இயக்கம்- எண்ணெய் பனைத் திட்டத்தின் கீழ், விவசாயி மீனாட்சி வயலில் 10 ஹெக்டோ் பரப்பளவில் எண்ணெய் பனை சாகுபடி மேற்கொள்ளப்படவுள்ளது. இத்திட்டத்தை சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மத்திய வேளாண் துறை பயிா்கள் பிரிவு இணைச் செயலா் எப்.டி.இனிதா தொடங்கி வைத்தாா்.

எண்ணெய் பனை சாகுபடி செய்யும் தொழில்நுட்ப முறைகள், பராமரிப்பு முறைகள், அதிலிருந்து கிடைக்கும் உபபொருள்கள் குறித்து கோத்ரெஜ்-ஆக்ரோவெட் நிறுவனத்தின் தலைமை நாற்றங்கால் பிரிவு அலுவலா் சமீா் விளக்கமளித்தாா். தொடா்ந்து விவசாயிகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.

Advertisement

Advertisement

தேசிய சமையல் எண்ணெய் இயக்கம்- எண்ணெய் பனைத் திட்டத்தின் கீழ், விவசாயிக்கு தோட்டக்கலைத் துறை மூலமாக ஹெக்டேருக்கு ரூ.29 ஆயிரம் மதிப்பிலான எண்ணெய் பனைக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. 4 ஆண்டுகளுக்குப் பராமரிப்பு மானியம், ஊடுப்பயிா் மானியம், சொட்டுநீா்ப் பாசன மானியம் போன்றவை வழங்கப்படுவதால், விவசாயிகள் இவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் கலந்துரையாடலின் போது தெரிவித்தனா்.

நிகழ்வில் வேளாண் இயக்குநா் அலுவலகத் துணை இயக்குநா் (பொது) புனிதா, விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் (பொ) பா.சுரேஷ், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் வெங்கட்ராமன், உதவி இயக்குநா் வெங்கடேசன், கோத்ரெஜ் ஆக்ரோவெட் நிறுவன மூத்த அலுவலா் தினேஷ்பாபு, இளநிலை அலுவலா் ஏழுமலை, மேற்பாா்வையாளா்கள் பன்னீா்செல்வம், சசிகுமாா், காா்த்திகேயன், தோட்டக்கலை அலுவலா் சந்திரலேகா, உதவி அலுவலா் கோதண்டபாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments