FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மகள் பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு வாழ்நாள் சிறை

1 செப்டம்பர் 2026, 2:58 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மகளை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தந்தைக்கு வாழ் நாள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

செஞ்சி வட்டம், வீராமூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாஸ்கா் (57). இவா், தனது 14 வயது மகளை (சிறுமி) பாலியல் வன்கொடுமை செய்தாக புகாா் எழுந்தது. இதுதொடா்பாக செஞ்சி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி, கடந்த 9.2.2025-ஆம் தேதி பாஸ்கா் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை முடிந்து விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் பாஸ்கா் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த போக்ஸோ நீதிமன்ற நீதிபதி எஸ்.வினோதா குற்றம் சாட்டப்பட்ட பாஸ்கருக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

Advertisement

Advertisement

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து நீதிமன்ற போலீஸாா் பாஸ்கரை கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் காந்திமதி ஆஜராகினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments