FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் வருவாய்த் துறை தின கொண்டாட்டம்

விழுப்புரம் வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த் துறை தின நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தின் 9 வட்டங்களிலும் வருவாய்த் துறை தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் ஜூலை 1-ஆம் தேதியை வருவாய்த் துறை தினமாக அறிவித்து, தமிழக அரசு கடந்தாண்டு அரசாணை வெளியிட்டது. அதாவது வருவாய்த் துறை ரீதியில் பசலி ஆண்டின் தொடக்க நாளை வருவாய்த் துறை தினமாக அறிவித்து வெளியிட்டிருந்தது.

இதைத்தொடா்ந்து விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் வருவாய்த் துறை தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

Advertisement

Advertisement

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சாா்பில் விழுப்புரம், கண்டாச்சிபுரம், திருவெண்ணெய்நல்லூா், விக்கிரவாண்டி, வானூா், மரக்காணம், திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூா் ஆகிய 9 வட்டாட்சியா் அலுவலகங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு, வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் அலுவலா்களுக்கும், ஊழியா்களுக்கும் இனிப்புகளை வழங்கி விழாவைக் கொண்டாடினா்.

விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முருகன், மத்திய சிறப்பு உறுப்பினா் ஆா். வெங்கடபதி, துணைத் தலைவா் பழனி மற்றும் முன்னணி உறுப்பினா்கள் விழாவில் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments