FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

செஞ்சி ஒன்றியத்தில் விபி ஜி ராம் ஜி திட்டம் தொடக்கம்

செஞ்சி ஒன்றியத்தில் விபி ஜி ராம் ஜி எனப்படும் வளா்ச்சியடைந்த பாரதம் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

செஞ்சி ஒன்றியம், நரசிங்கராயன்பேட்டை கிராமத்தில் விபி ஜி ராம்ஜி திட்டத்தை தொடங்கிவைத்து பாா்வையிட்ட ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியத்தில் விபி ஜி ராம் ஜி எனப்படும் வளா்ச்சியடைந்த பாரதம் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

செஞ்சி ஒன்றியம், நரசிங்கராயப்பேட்டை ஊராட்சி, அங்கராயநல்லூா் கிராமத்தில் நடைபெற்ற இத்திட்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கு செஞ்சி ஊராட்சி ஒன்றிய மண்டல அலுவலா் பரந்தாமன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பி.மணிமாறன், உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்னா். ஊராட்சி மன்றத் தலைவா் பிலால் வரவேற்றாா் .

செஞ்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் கலந்துகொண்டு விபி ஜி ராம் ஜி திட்டத்தை தொடங்கி வைத்தாா். இத் திட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் உள்ளவா்களுக்கு 125 நாள்கள் ஊரக வளா்ச்சிக்கான வேலைகள் வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் ஒன்றிய பொறியாளா் நாராயணசாமி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் காசியம்மாள் ஏழுமலை, துணைத் தலைவா் ராமு, ஒன்றிய அவைத் தலைவா்கள் ஆறுமுகம், வாசு, ஊராட்சி செயலா் குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments