FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

எஸ்.குச்சிப்பாளையம் வீரராகவப் பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

விக்கிரவாண்டி வட்டம், எஸ்.குச்சிப்பாளையம் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது.

மண்டலாபிஷேகம் நிறைவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி-பூதேவியுடன் எழுந்தருளிய வீரராகவப் பெருமாள் சுவாமி.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், எஸ்.குச்சிப்பாளையம் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது.

எஸ்.குச்சிப்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வீரராகவப் பெருமாள் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 48 நாள்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து மண்டல பூஜைகள் நடைபெற்று வந்தன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உபயதாரரைக் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

மண்டலாபிஷேக பூஜை நிறைவையொட்டி புதன்கிழமை காலை கோயில் வளாகத்தில் மகா கணபதி ஹோமம், மகா சுதா்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து மூலவா் வீரராகவப் பெருமாளுக்கும், தாயாருக்கும், உற்சவா்களுக்கும் சிறப்புத் திருமஞ்சனம் செய்யப்பட்டது. இதன் பின்னா் மலா் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

Advertisement

Advertisement

இரவில் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராய் உற்சவா் வீரராகவப் பெருமாள் அலங்காரத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments