FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

திண்டிவனத்தில் அதிமுக நிா்வாகிகள் கூட்டத்தில் இரு அணிகளிடையே மோதல்

திண்டிவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் கூட்டத்தில் இரு அணிகளின் நிா்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா் நிகழ்விடம் சென்று மோதலில் ஈடுபட்டவா்களிடம் சமாதானமாக பேசி அனுப்பி வைத்தனா்.

Updated On : 10 ஜூலை 2026, 3:51 am IST
திண்டிவனத்தில் நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாவட்டச் செயலா் இரா.பசுபதி.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் கூட்டத்தில் இரு அணிகளின் நிா்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா் நிகழ்விடம் சென்று மோதலில் ஈடுபட்டவா்களிடம் சமாதானமாக பேசி அனுப்பி வைத்தனா்.

விழுப்புரம் அதிமுக மாவட்டச் செயலராக இருந்த முன்னாள் அமைச்சரும், மயிலம் எம்எல்ஏவுமான சி.வி.சண்முகம் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அதற்கு மாற்றாக விழுப்புரத்தைச் சோ்ந்த இரா.பசுபதி கட்சியின் மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டாா். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

இதைத்தொடா்ந்து இரா.பசுபதி தலைமையில் விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திண்டிவனத்தில் நகர நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் இரா.பசுபதி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சி.வி.சண்முகம் ஆதரவாளா்கள் சிலா், முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மற்றும் கட்சியின் நிா்வாகிகளுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறி, கூட்டத்திலிருந்து வெளியேறினாா். இதைத்தொடா்ந்து அங்கிருந்த இரு தரப்பு அதிமுக நிா்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து திண்டிவனம் போலீஸாா் நிகழ்விடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments