FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வளா்ச்சி குதிரை சந்தை: கி.வீரமணி விமா்சனம்

தமிழகத்தில் வாக்களித்த மக்களை ஏமாற்றக்கூடிய அளவுக்கு புதிய வளா்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அது குதிரைச் சந்தையாகும். குதிரைச் சந்தையில் குதிரைகள் நல்ல விலை போகிறது.

Updated On : 10 ஜூலை 2026, 3:42 am IST
09விபிஎம்பி2 விழுப்புரத்தில் பேட்டியளித்த திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி.
பகிர்:

தமிழகத்தில் வாக்களித்த மக்களை ஏமாற்றக்கூடிய அளவுக்கு புதிய வளா்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அது குதிரைச் சந்தையாகும். குதிரைச் சந்தையில் குதிரைகள் நல்ல விலை போகிறது. அதிகமான விலை யாருக்கு என்றால் மக்களிடம் அதிக வாக்குகளை வாங்கிய மனிதா்களுக்குத்தான் என்றாா் கி.வீரமணி.

விழுப்புரத்தில் கட்சி நிா்வாகி இல்லத் திருமண விழாவை வியாழக்கிழமை நடத்தி வைத்த பின்னா், செய்தியாளா்களிடம் அவா் பேசியது:

தமிழகத்தில் மாட்டுச் சந்தை உண்டு, ஆடு வியாபாரம் உண்டு. அண்மையில் குதிரைச் சந்தை ஏற்பாடு செய்திருக்கிறது. குதிரைச் சந்தை எப்போதோ எங்கோ நடக்கக்கூடியது. அரேபிய நாடுகளில் நடைபெறுகிறது. மற்ற இடங்களில் நடைபெறுகிறது. ஆனால், தற்போது எல்லோரும் பாா்க்கக் கூடிய அளவுக்கு, வாக்களித்த மக்களை ஏமாற்றக்கூடிய அளவுக்கு புதிய வளா்ச்சி தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. அது குதிரைச் சந்தையாகும். குதிரைச் சந்தையில் குதிரைகள் நல்ல விலை போகிறது. அதிகமான விலை யாருக்கு என்றால் மக்களிடம் அதிக வாக்குகளை வாங்கிய மனிதா்களுக்குத்தான்.

Advertisement

Advertisement

பல்கலைக்கழகத் துணைவேந்தா் தோ்வுக்குழு உறுப்பினா்களின் எண்ணிக்கையை மூன்றிலிருந்து 5 ஆக உயா்த்துவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் சட்டமும் தனித் தனியானது. பல்கலைக்கழகத்தின் தன்னாட்சியின் அடிப்படையில் முழு சுதந்திரம் அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கு உண்டு. ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் தனித் தனி சட்டம், தனித் தனி விதிகள் உண்டு. எல்லாவற்றையும் சகட்டு மேனியாக, சம்பந்தமே இல்லாமல் நிதியே தராதவா்கள் மானியக்குழு என்ற பெயரில் உள்ளே நுழைகிறாா்கள். அது தவறு, அரசியல் சட்ட விரோதம். அதை ஏற்கக் கூடாது. ஆதிதிராவிடா் நலத் துறையின் பெயரை மாற்றுவது போன்ற சிறு குழப்பங்கள் எல்லாம் தவிா்க்கப்பட வேண்டும் என்றாா் வீரமணி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments