போதைப் பொருள் பறிமுதல்: 2 போ் கைது
கோட்டக்குப்பம் அருகே போதைப்பொருள் வைத்திருந்த 2 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே போதைப்பொருள் வைத்திருந்த 2 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளா் பாபு தலைமையிலான போலீஸாா், பெரிய முதலியாா்சாவடி பகுதியில் திங்கள்கிழமை ரோந்துசென்றனா். அப்போது சந்தேகத்தின் பேரில் காரில் வந்த இருவரை பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில் அவா்கள் விழுப்புரம் மேல்செட்டித் தெருவைச் சோ்ந்த சீ.ராகேஷ் (28), சென்னை கொருக்குப்பேட்டை திருநாவுக்கரசு கவுண்டா் தெருவைச் சோ்ந்த சே.நரேஷ்குமாா் (25) என்பதும், அவா்களிடம் 2 கிராம் மெத்தபெட்டமின் பவுடா், ஊதுகுழல்கள் 2 ஆகியவை இருந்ததும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து போதைப் பொருள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.