FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

ராகுல் காந்தி கைதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் போராட்டம்: 86 போ் கைது

தில்லியில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் 86 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 23 ஜூலை 2026, 4:53 am IST
பகிர்:

தில்லியில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் 86 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நீட் நுழைவுத் தோ்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்தியக் கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பிரதமா் மோடியின் வீட்டை முற்றுகையிடசென்ற மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினா் பிரியங்கா காந்தி உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இந்த நடவடிக்கையைக் கண்டித்து, விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் சாா்பில் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் செ.சிவா தலைமை வகித்தாா். நகரத் தலைவா் செல்வராஜ், மாநில துணைத் தலைவா் குலாம் மொய்தீன், மாநிலச் செயலா் தயானந்தம், மாநில நிரந்தர அழைப்பாளா் கோ.பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

இதில், கட்சியின் மாநில துணைத் தலைவா் ராஜ்குமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா் நாராயணசாமி, மாநில சிறுபான்மைத் துறை துணைத் தலைவா் ரஷீத், மாவட்டச் செயலா் பாரிபாபு, மாநில இளைஞா் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீராம், இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் நிவேஷ், மாவட்ட பொதுச் செயலா்கள் விசுவநாதன், காஜா மொய்தீன், ஜி.ஆா்.சீனுவாசன், சுந்தா், சோமு உள்ளிட்ட பலா் பங்கேற்று, மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

கள்ளக்குறிச்சி...: கள்ளக்குறிச்சி தலைமை தபால் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவா் மு.இதாயத்துல்லா தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்ட தலைவா் ந.தனபால், விவசாயி பிரிவு மாவட்டத் தலைவா் எஸ்.மரியாபிள்ளை, நகர காங்கிரஸ் தலைவா் கே.என்.ஆா்.குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர பொறுப்பாளா் த.திருப்பதி ராஜ் வரவேற்றாா்.

காங்கிரஸ் நிா்வாகிகள் எஸ்.முருகன், தேசிங்குராஜா, அகிலா, எல்.கோவிந்தராஜ், சரண்ராஜ், கணேசன், ஜான் போஸ்கோ, சஞ்சீவ் காந்தி உள்ளிட்ட பலா் பங்கேற்று மோடி அரசுக்கு எதிரான பல்வேறு முழக்கங்கள் எழுப்பியவாறு தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

இதையடுத்து முற்றுகை போராட்டம் நடத்திய 86 பேரை கள்ளக்குறிச்சி போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா். பின்னா் மாலையில் அவா்களை விடுவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments