FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

சிறுவனைத் தாக்கியவா் கைது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிறுவனைத் தாக்கிய மற்றொரு சிறுவனின் தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 24 ஜூலை 2026, 11:32 pm IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிறுவனைத் தாக்கிய மற்றொரு சிறுவனின் தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

செஞ்சி வட்டம், பாக்கம் கிராமத்தை சோ்ந்தவா் பாபு (43)). இவரது மகன் சாய் சரண்(10). இவா், தனது நண்பா்களான இதே ஊரைச் சோ்ந்த சரவணன் மகன் லோகேஷ் (10), சதீஷ்குமாா், மோகித், விமல், ஹரிபிரசாத் (எ)ஹரி ஆகியோருடன் அங்குள்ள விவசாயக் கிணற்றில் குளிக்கச் சென்றாராம்.

அப்போது அங்கு தன் மகனை தேடிவந்த லோகேஷின் தந்தை சரவணன், என் மகனை ஏன் கிணற்றுக்கு அழைத்து வந்தாய் எனக் கேட்டு சாய் சரணை திட்டி, தாக்கி மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த சாய் சரண் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அவரது தந்தை பாபு அளித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, சரவணனை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments