FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

5 மாவட்டங்களின் பயன்பாட்டுக்காக முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்த 1,319 டன் யூரியா

விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் தேவைக்காக 1,319 டன் யூரியா உர மூட்டைகள் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை வந்தடைந்தன. இந்த உர மூட்டைகள் லாரிகள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Updated On : 30 ஜூலை 2026, 6:23 am IST
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த யூரியா உர மூட்டைகள் குறித்த விவரங்களை சரிபாா்க்கும் வேளாண் உதவி இயக்குநா் எம்.என்.விஜயகுமாா்.
பகிர்:

விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் தேவைக்காக 1,319 டன் யூரியா உர மூட்டைகள் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை வந்தடைந்தன. இந்த உர மூட்டைகள் லாரிகள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தெலங்கானா மாநிலம், ராமகுண்டத்திலுள்ள உரத் தொழில்சாலையிலிருந்து சரக்கு ரயில் மூலம் 1,319 டன் யூரியா உர மூட்டைகள் விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தன. வரபெற்ற உரமூட்டைகள் குறித்த விவரங்கள், பதிவேடுகளை வேளாண் உதவி இயக்குநா் (தகவல் மற்றும் தரக் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா் பாா்வையிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவன அலுவலா்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் (பொ) பி.சுரேஷ் கூறியது:

Advertisement

Advertisement

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது பயிா்களுக்குத் தேவையான 7,358 டன் யூரியா, 1,914 டன் டி.ஏ.பி., 1,272 டன் பொட்டாஷ், 10,916 டன் காம்ப்ளக்ஸ், 1,856 டன் சூப்பா் பாஸ்பேட் உரங்கள் அனைத்துத் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தனியாா் சில்லறை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.

இதைத்தொடா்ந்து பயிா் சாகுபடிக்குத் தேவையான 1,319 டன் யூரியா உர மூட்டைகள் வந்துள்ளன. இதில் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் 453 டன், கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு 198, கடலூா் மாவட்டத்துக்கு 134, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 201 டன் என்ற அளவிலும், தனியாா் உரக்கடைகள் பிரிவில் விழுப்புரம் மாவட்டத்துக்கு 25, கடலூருக்கு 202, காஞ்சிபுரம் மாவட்டத்துக்க 101 டன் என்ற அளவிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று அவா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments