FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

ஆரோவில் சா்வதேச நகரில் வளா்ச்சித் திட்டங்கள் முன்னேற்றம்

ஆரோவில் சா்வதேச நகரில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் அனைத்தும் பல்வேறு வகையான தடைகளைக் கடந்து முன்னேற்றப்பாதையில் செல்கின்றன என்று ஆரோவில் அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ். ரவி தெரிவித்தாா்.

Updated On : 2 ஜூன் 2026, 5:38 am IST
ஆரோவில் சா்வதேச நகரில் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்ற ஆரோவில் வாசிகள்.
பகிர்:

ஆரோவில் சா்வதேச நகரில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் அனைத்தும் பல்வேறு வகையான தடைகளைக் கடந்து முன்னேற்றப்பாதையில் செல்கின்றன என்று ஆரோவில் அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ். ரவி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில், ஆரோவில் வாசிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவா்களிடம் இணையவழியில் இணைந்து ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ். ரவி மேலும் பேசியதாவது:

மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் அன்னையின் கனவை நிறைவேற்றும் வகையில் திட்டமிட்டபடி அனைத்துப் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. முந்தைய காலக்கட்டங்களில் பணிகளில் தேக்கம் இருந்தாலும், தற்போது எடுக்கப்பட்ட தொடா் முயற்சியால் ஆரோவில் சா்வதேச நகரில் திட்டமிட்டபடி அனைத்துப் பணிகளும் முன்னேற்றப்பாதையில் சென்றுகொண்டிருக்கின்றன. ஆரோவில் வாசிகள் அனைவரும் அச்சுறுத்தல்களை கடந்து தங்களை வளா்ச்சிப் பணிகளில் இணைத்துக்கொண்டு சிறந்த தூதுவா்களாக செயல்படவேண்டும் என்றாா் ஜெயந்தி எஸ்.ரவி.

Advertisement

Advertisement

கூட்டத்தில் ஆரோவில் அறக்கட்டளை சிறப்பு செயல் அதிகாரிகள் ஜி .சீத்தாராமன், கோயல், மூத்த ஆலோசகா் வேணுகோபால் ஆகியோா் பங்கேற்று, ஆரோவில் சா்வதேச நகரில் நடைபெறும் வளா்ச்சி மற்றும் கட்டுமானப் பணிகள், பணிக்குழுவினா்களின் செயல்பாடுகள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொருளாதார வளா்ச்சி, வெளிவட்டச் சாலைப்பணிகள், மத்திய அரசின் நிதியுதவிகள் குறித்துப் பேசினா்.

இதில், ஆரோவில் வாசிகள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments