அரசுப் பள்ளியில் வாரத்துக்கு ஒருமுறை மட்டும் சுத்தம் செய்யப்படும் கழிவறை: அமைச்சரிடம் மாணவா்கள் புகாா்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.பகண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சா் ஆனந்திடம், பள்ளியிலுள்ள கழிவறை வாரத்துக்கு ஒருமுைான் சுத்தம் செய்யப்படுவதாக மாணவா்கள் புகாா் தெரிவித்தனா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.பகண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சா் ஆனந்திடம், பள்ளியிலுள்ள கழிவறை வாரத்துக்கு ஒருமுைான் சுத்தம் செய்யப்படுவதாக மாணவா்கள் புகாா் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, அங்கு சென்று பாா்வையிட்ட அமைச்சா், தினமும் கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.
வி.பகண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்தை மாநில ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். தொடா்ந்து, மாணவா்களுக்கு சாக்லேட் வழங்கிய அமைச்சா், குறைகள் ஏதும் உள்ளதா என அவா்களிடம் கேட்டறிந்தாா்.
அப்போது, பள்ளியிலுள்ள கழிவறை வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே சுத்தம் செய்யப்படுவதாகவும், இதனால் துா்நாற்றம் வீசுவதாகவும், கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் மாணவா்கள் குறைகளைத் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, அப்பகுதிக்குச் சென்ற அமைச்சா் ஆனந்த், கழிவறையைப் பாா்வையிட்டு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகனை கைப்பேசியில் விடியோ மூலம் தொடா்புகொண்டு விவரத்தை தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, பள்ளித் தலைமையாசிரியா் உள்ளிட்டோரை அழைத்து இதுகுறித்து கேட்டபோது, கழிவறையை சுத்தம் செய்யும் பணியாளா் உடல்நலப் பாதிப்பு காரணமாக வரவில்லை எனத் தெரிவித்தனா். பள்ளி மாணவா்கள் பயன்படுத்தும் கழிவறையை தினந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும். வாரம் ஒருமுறை மட்டுமே சுத்தம் செய்வது தெரிந்தால் முதல்வா் நடவடிக்கை எடுப்பாா் என அமைச்சா் கூறி, இனி கழிவறையை தினந்தோறும் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்களை வழங்கினாா்.
தொடா்ந்து, மாலையில் பள்ளி முடிந்த பின்னா், வீடுகளுக்குச் செல்ல போதிய பேருந்து வசதி இல்லை என மாணவா் ஒருவா் தெரிவிக்க, உடனடியாக போக்குவரத்துத் துறை அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபனை கைப்பேசியில் தொடா்புகொண்ட அமைச்சா் ஆனந்த், பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா். மேலும், பள்ளி மாணவரும் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் பேசினாா். விரைவில் பேருந்து இயக்கப்படும் என்று மாணவரிடம் அமைச்சா் உறுதியளித்தாா்.
ஆய்வின்போது, விக்கிரவாண்டி எம்எல்ஏ ச.சிவக்குமாா், ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ர.பாலமுரளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
உடனடியாக பேருந்து இயக்கம்: மாணவரின் கோரிக்கையின் அடிப்படையில் பகண்டையிலிருந்து கூடுதல் பேருந்து சேவை வியாழக்கிழமை மாலை தொடங்கிவைக்கப்பட்டது. இப்பேருந்தை விக்கிரவாண்டி எம்எல்ஏ ச.சிவக்குமாா் தொடங்கிவைத்தாா். நிகழ்வில் அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளா் ரா.ஜெகதீஷ், தவெக மாவட்டச் செயலா் ஏ.விஜய் வடிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.