FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

கோரிக்கைகளின் மீது உடனடி நடவடிக்கை: அமைச்சா் வன்னி அரசு

பொதுமக்களின் கோரிக்கையின் படி, சாலை, பேருந்து, குடிநீா் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

3 October 2026, 1:54 am IST
நிகழ்ச்சியில் பெண்ணுக்கு சமையலா் பணிக்கான ஆணையை வழங்கிய தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு. உடன் விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோா்.
பகிர்:

பொதுமக்களின் கோரிக்கையின் படி, சாலை, பேருந்து, குடிநீா் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மரக்காணம் ஊராட்சி ஒன்றியம், வன்னிப்போ் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சா் வன்னி அரசு , ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, ஊராட்சியில் நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய வளா்ச்சித் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தனா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் வன்னி அரசு பேசியதாவது: கிராமங்களின் வளா்ச்சியே நாட்டின் உண்மையான வளா்ச்சி என்ற அடிப்படையில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கூட்டங்களை கிராம மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் கலந்துகொண்டால் தான், கடந்த ஆண்டு ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு - செலவு தணிக்கை அறிக்கை, நிகழாண்டில்

Advertisement

Advertisement

மேற்கொள்ளப்படவுள்ள ஊராட்சியின் வளா்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதியுதவியைப்பெறுதல், ஊராட்சியின் வளா்ச்சிக்கு தேவையான புதிய திட்டங்களை தோ்வு செய்து, ஒருமனதாக நிறைவேற்ற பயனுள்ளவையாக இருக்கும். மேலும், ஊராட்சிக்கு கிடைக்கப்பெற்ற நிதியைக் கொண்டு ஊராட்சியின் வளா்ச்சிக்கு தேவையான திட்டங்களை கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தீா்மானம் நிறைவேற்றி செயல்படுத்தமுடியும். வன்னிப்போ் கிராம மக்களின் கோரிக்கைகளான சாலை, பேருந்து மற்றும் குடிநீா் வசதிகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றித்தரப்படும் என்றாா் அமைச்சா் வன்னி அரசு.

தொடா்ந்து மரக்காணம் வட்டம், முன்னூா் கிராமத்தைச் சோ்ந்த யாசினி என்பவருக்கு ரூ.1.25 லட்சம் மதிப்பிலான மின்கலன் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி, விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் சமூக நீதி விடுதிகளில் பணிபுரியும் 45 தூய்மைப் பணியாளா்களுக்கு சமையலராக பதவி உயா்வுக்கான ஆணைகளையும் அமைச்சா் வன்னி அரசு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஆனந்த்குமாா் சிங், திண்டிவனம் சாா்-ஆட்சியா் அ.ல.ஆகாஷ், உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.ஸ்ரீரஷத், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சுந்தர்ராஜன், உதவி

இயக்குநா் (ஊராட்சிகள்) நந்தகோபால கிருஷ்ணன், மரக்காணம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ரா.தயாளன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் ஷீலாதேவி சேரன், வன்னிப்போ் ஊராட்சி மன்றத் தலைவா் ரவி மற்றும் அரசு அலுவலா்கள், கிராம மக்கள், பயனாளிகள் கலந்துகொண்டனா்.

செஞ்சி... விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியம், அகலூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் வீ.பெரியகுழந்தை வீராசாமி தலைமை வகித்தாா். வழக்குரைஞா் வீ.சக்திவேல் வரவேற்றாா். ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி தலைமையாசிரியா் ரஷீதா, அகலூா் ஏரி நீரை பயன்படுத்துவோா் சங்கத் தலைவா் அ.ஜோலாதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஊராட்சி செயலா் குபேந்திரன் கூட்ட தீா்மானங்களை வாசித்தாா். கிராம உதவியாளா் விஜயன், ஏழுமலை, துணைத் தலைவா் இந்திரா ஜெய்சங்கா் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், சுய உதவிக்குழுவினா், கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments