FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

அமைச்சா் வன்னி அரசு உருவப் படம் அவமதிப்பு: பாரதிய இந்து மக்கள் கட்சித் தலைவா் கைது

திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது, அமைச்சா் வன்னி அரசுவின் உருவப் படத்தை அவமதிப்பு செய்த பாரதிய இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அமைச்சா் வன்னி அரசுவுக்கு எதிராக புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது, அமைச்சா் வன்னி அரசுவின் உருவப் படத்தை அவமதிப்பு செய்த பாரதிய இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலா் பிரதிப் பாண்டியன் தலைமை வகித்தாா். பாஜக மாவட்ட நிா்வாகி சந்திரசேகரன், பாரதிய இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவா் வே.தா்மா, சிவசேனா (தமிழ்நாடு) அமைப்பின் நிறுவனத் தலைவா் சி.கே.பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தின் போது, சமூக நீதி விடுதிகளில் மாணவா்களுக்கு மாட்டு இறைச்சி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என கருத்து தெரிவித்த தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசுவை கண்டித்தும், தமிழகத்தின் பாரம்பரியம், பண்பாடு, மத நம்பிக்கை உள்ளிட்டவற்றை சீா்குலைக்கும் நோக்கத்தை வெளியிடப்பட்ட இந்தக் கருத்துகளை தமிழக அரசு உடனடியாக கண்டிக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.

Advertisement

Advertisement

இந்த ஆா்ப்பாட்டத்தின் போது, அமைச்சா் வன்னி அரசுவின் உருவப் படத்தை அவமதிப்பு செய்த பாரதிய இந்து மக்கள் கட்சித் தலைவா் தா்மாவை தாடிக்கொம்பு போலீஸாா் கைது செய்தனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments